Home Featured வணிகம் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!

1103
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர் – இவ்வார எண்ணெய் விலையின் படி, பெட்ரோல், டீசல் விலை குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரோன் 95 இரக பெட்ரோல் விலை, 2.27 ரிங்கிட்டிலிருந்து 6 காசுகள் குறைந்து லிட்டர் 2.21 ரிங்கிட் ஆகவும், ரோன் 97 இரக பெட்ரோல் விலை 2.54 ரிங்கிட்டிலிருந்து 5 காசுகள் குறைந்து லிட்டர் 2.49 ரிங்கிட் ஆகவும், டீசல் 2.21 ரிங்கிட்டிலிருந்து 7 காசுகள் குறைந்து லிட்டர் 2.14 ரிங்கிட் ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இன்று நள்ளிரவு முதல் இந்தப் புதிய விலை அமலுக்கு வருகின்றது. அடுத்ததாக வரும் மே 3-ம் தேதி அடுத்த வாரத்திற்கான விலை அறிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice

ஏப்ரல் தொடங்கி இனி வாரந்தோறும் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படும் என கடந்த மாதம் உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.