ரஜினி வீட்டின் முன் தீக்குளிப்போம் என ரசிகர்கள் மிரட்டல்!

rajinikanthசென்னை – இன்று திங்கட்கிழமை தொடங்கி மே 19-ம் தேதி வரை, மாவட்டம் வாரியாக ரசிகர்களைச் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினியைச் சந்திப்பதற்கும், ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் அவர்கள் அடையாள அட்டை இருக்க வேண்டுமெனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தில், ரஜினியைச் சந்திக்க வழங்கப்பட்ட கூப்பன்களின் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அக்கூப்பன்கள் மூவாயிரம், நாலாயிரம் விலைக்கு விற்கப்பட்டதாகவும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தப் பலர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

மேலும், ரஜினி இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், ரஜினி வீட்டின் முன் தீக்குளிப்போம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.

 

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts