அரசியல் பழிவாங்கும் முயற்சி – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

p-chidambaram_81சென்னை – தனது வீட்டிலும், தனது உறவினர்கள் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி வருவது அரசியல் ரீதியான பழிவாங்கும் முயற்சி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசாங்கம் என்னையும், எனது மகன் மற்றும் இன்னும் சிலரையும் குறி வைத்து சிபிஐ மற்றும் இன்னும் பிற பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளை அனுப்புகிறது. அரசாங்கம் எனது குரலையும், எனது எழுத்தையும் நிறுத்த முயற்சி செய்கிறது. எதிர்கட்சியினரையும், பத்திரிகையாளர்களையும், அரசு சாரா இயக்கங்களையும் தடுத்து நிறுத்தியது போல் என்னை நிறுத்தப் பார்க்கிறது. ஆனால் நான் சொல்கிறேன். தொடர்ந்து பேசவும், எழுதவும் செய்வேன்” என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts