3310 ரூபாய் விலையில் நோக்கியா 3310! மே 18 முதல் கிடைக்கும்!

nokia-3310-new

புதுடில்லி – நாளை வியாழக்கிழமை 18 மே முதல் இந்தியா எங்கும் புதிய இரக நோக்கியா 3310 செல்பேசிகள் விற்பனைக்கு வருகின்றன. அந்த நாளில்  புகழ் பெற்ற நோக்கியா 3310 இரக செல்பேசிகள் பாணியில், புதிய தொழில் நுட்பத்துடன், ஆனால் அதே தோற்றத்துடன் இந்தப் புதிய செல்பேசிகள் வெளியிடப்படுகின்றன.

இந்தியாவில் மட்டும் வெளியிடப்படும் இந்த நோக்கியா 3310 செல்பேசிகளின் விலையும் 3310 ரூபாய் என புதுமையான முறையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

நோக்கியா என்ற வணிக முத்திரையைப் பயன்படுத்தி செல்பேசிகள் தயாரிக்கும் பணியில் தற்போது எசச்எம்டி குளோபல் என்ற இந்திய நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

நோக்கியா 3310 இரக செல்பேசிகள் இந்தியாவில்தான் முதன் முதலாக விற்பனைக்கு வருகின்றன என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts