ரேண்சம்வேர் வைரஸ்: மலேசிய வங்கிகள் பாதுகாப்பாக உள்ளன!

malaysianatmbanksகோலாலம்பூர் – ரேண்ட்சம்வேர் வைரஸ் தாக்குதல் காரணமாக மலேசிய வங்கிகளின் இணையப் பக்கங்களும், ஏடிஎம் சேவைகளும் முடக்கப்பட்டதாக ஊடகங்களில் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என மலேசிய வங்கிகளின் சங்கம்
(ஏபிஎம்) அறிவித்திருக்கிறது.

தங்களது சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் வங்கிகள் தங்களது இணையதள சேவைகளிலும், ஏடிஎம் சேவைகளிலும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்திருப்பதாக ஏபிஎம் கூறுகின்றது.

“நாடெங்கிலும் உள்ள ஏடிஎம் மையங்களில் சில, இந்த சமயத்தில் அவ்வப்போது செயல்படாமல் இருக்கலாம். அதற்கு காரணம் அவை வழக்கமான பராமரிப்பு வேலைகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கலாம்” என்று இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஏபிஎம் தெரிவித்திருக்கிறது.

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts