Home Featured கலையுலகம் கவிஞர் நா.காமராசன் காலமானார்!

கவிஞர் நா.காமராசன் காலமானார்!

1748
0
SHARE
Ad

na-kamarasan

சென்னை – வித்தியாசமான திரைப்படப் பாடல்களாலும், புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதிய பாடல்களாலும் புகழ்பெற்ற பாடலாசிரியரும், புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவருமான நா.காமராசன் நேற்று புதன்கிழமை காலமானார்.

அவருக்கு வயது 75. 1965-ஆம் ஆண்டில் தமிழகத்தை உலுக்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர் நா.காமராசன்.

#TamilSchoolmychoice

நா.காமராசனின் ‘கருப்பு மலர்கள்’, தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும், சஹாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் போன்ற நூல்கள் புகழ்பெற்றவையாகும்.

தமிழில் புதுக் கவிதை வடிவில் திரைப்படப் பாடல்களை உருவாக்கிய காரணத்தினால் நா.காமராசன் புகழ் பெற்றார். இவரது திறமை கண்டு எம்ஜிஆர் தனது படங்களில் எல்லாம் வாய்ப்புகள் தந்தார்.

ஆனால், எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகியதும், நா.காமராசனின் பாடல் எழுதும் பங்களிப்பும் வெகுவாகக் குறைந்தது. நீண்ட காலமாக திரைத் துறையிலிருந்தும், பாடல்கள் எழுதுவதில் இருந்தும் ஒதுங்கியிருந்தார் காமராசன்.

உடல்நலக் குறைவால் காமராசன் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.