Home அவசியம் படிக்க வேண்டியவை ‘வாட்ஸ் அப்’ செயலியில் புதிய வசதியாக நீல நிற குறியீடுகள்!

‘வாட்ஸ் அப்’ செயலியில் புதிய வசதியாக நீல நிற குறியீடுகள்!

488
0
SHARE
Ad

IMG_20141105_172522-730x515

கோலாலம்பூர், நவம்பர் 6 – இன்றைய சூழ்நிலையில் திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்களின் மிகவும் விரும்பப்படும் முன்னணி செயலியாக ‘வாட்ஸ் அப்’ இருந்து வருகின்றது.

வாட்ஸ் அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் புதிய உற்சாகத்தைக் கொடுக்கும். அதேவேளையில் சிலருக்கு லேசான வருத்தத்தையும் கொடுக்கலாம்.

#TamilSchoolmychoice

காரணம், இந்த செயலியை பயன்படுத்தும் போது, எதிர்முனையில் இருப்பவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்து விட்டது என்றால் இரண்டு  ‘டிக்’ குறிகள் காட்டும். படிக்கவில்லை என்றால் ஒரு ‘டிக்’ குறி இருக்கும்.

இந்நிலையில், இன்று முதல் ‘வாட்ஸ் அப்’ புதிய மேம்பாடு ஒன்றை செய்துள்ளது. அதாவது எதிர்முனையில் இருப்பவர் நீங்கள் அனுப்பிய குறுஞ் செய்தியைப் படித்துவிட்டார் என்றால் நீல நிறத்தில் இரண்டு ‘டிக்’ குறிகளைக் காட்டும்.

என்றாலும், இந்த மேம்பாடு சில மணி நேரங்களே நீடித்தன.

தற்போது இந்த நீல நிற ‘டிக்’ குறிகள்  குரல் வழி தகவல் (Voice Message) பகிர்வுக்கு மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

விரைவில் குரல் வழி செய்தி மற்றும் குறுஞ்செய்தி இரண்டிற்கும் இந்த வசதி செய்யப்படவுள்ளது.