Home நாடு ரோன்95 மானியங்கள் ரத்து: மக்கள் புரிந்து கொள்வர் – முஸ்தபா முகமட்!

ரோன்95 மானியங்கள் ரத்து: மக்கள் புரிந்து கொள்வர் – முஸ்தபா முகமட்!

815
0
SHARE
Ad

Mustapa-Mohamedகோலாலம்பூர், நவம்பர் 24 – ரோன்95 எண்ணெய் மானியங்கள் ரத்து விவகாரத்தில் மக்கள் அரசின் நிலைப்பாட்டை புரிந்து கொள்வர் என அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் (படம்) தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் ரோன்95 எண்ணெய்க்கு கொடுக்கப்பட்டிருந்த மானியங்களை ரத்து செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்துவதாக இந்த விவகாரம் விமர்சிக்கப்பட்டாலும், அரசு தரப்பு, நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கங்கள் கொடுத்து வருகின்றது.

இந்நிலையில் அமைச்சர் முஸ்தபா முகமட்  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரோன்95 எண்ணெய்க்கான மானியங்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மக்கள் அரசின் நிலைப்பாட்டை புரிந்து கொள்வர். அரசின் நிதி நிலையை சீர்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் சேமிக்கப்படும் நிதியானது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் பயன்படுத்தப்பட இருக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

எண்ணெய்களுக்கான மானியங்கள் ரத்து செய்வதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அண்டை நாடான இந்தோனேசியாவில் மானியங்கள் ரத்து செய்யப்பட்டதனால் எண்ணெய் விலை 30 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.