Home உலகம் 50 ஆண்டு கால சிங்கப்பூர் தமிழிலக்கியத்தை மின்னிலக்கமாக்கும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

50 ஆண்டு கால சிங்கப்பூர் தமிழிலக்கியத்தை மின்னிலக்கமாக்கும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

860
0
SHARE
Ad

minister-iswaran

சிங்கப்பூர்,அக் 18- 2015-இல் சிங்கப்பூர் தனது 50-ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளதை ஒட்டி அங்கு வாழும் தமிழ் சமூகத்திற்கு  அன்பளிப்பாக ஒரு மாபெரும் இலக்கிய நிகழ்வை மேற்கொள்ளவிருக்கிறது. 50 ஆண்டு கால சிறப்பு வாய்ந்த சிங்கப்பூர் தமிழிலக்கியத்தை மின்னிலக்கமாக்கும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டமே அந்த அன்பளிப்பு ஆகும்.

அருண் மகிழ்நனின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 1965-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது முதல் 2015-ஆம் ஆண்டு  வரையில் அங்கு வெளியான அனைத்து தமிழ் இலக்கியத்தையும் மின்னிலக்கம் செய்து நிரல்படுத்தி அந்நாட்டில் வாழும் தமிழ் சமூகத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதே இந்நிகழ்வின் நோக்கமாகும். கடந்த சனிக்கிழமை, ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் இத்திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ் ஈஸ்வரன், தமிழ் கலாசாரம், தமிழ் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியன இளம் தலைமுறையினரைச் சென்றடைய தகவல் தொழில்நுட்பம் ஒரு முக்கிய அம்சமாக விளங்குவதாக கூறினார்.

#TamilSchoolmychoice

அதோடு, “சிங்கப்பூரின் சவால்கள், சிங்கப்பூரர்களின் இலட்சியங்கள், கவலைகள் ஆகியவற்றை கடந்த தலைமுறையைச் சேர்ந்த  எழுத்தாளர்கள் எவ்வாறு மக்களிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்பதனை எதிர்காலத் தலைமுறையினர்கள் அறிந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக விளங்கும் என அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மின்மரபுடைமைக் குழு வழி நடத்தும் இத்திட்டத்திற்கு தேசிய நூலக வாரியம், தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய கலை மன்றம், சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு வாரியம்  உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு வழங்கவிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.