Home நாடு கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்: அஸ்மின் அலி உட்பட பலர் எதிர்ப்பு!

கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்: அஸ்மின் அலி உட்பட பலர் எதிர்ப்பு!

692
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 – மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவில் புதிய விவகாரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Crossremoved

பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில், உள்ள ஒரு தேவாலயத்தின் சுவற்றில் இருந்த சிலுவையை அகற்றும் படி, நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் தேவாலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

#TamilSchoolmychoice

95 சதவிகித முஸ்லிம்கள் வசிக்கும் அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் சிலுவையை வைக்கக் கூடாது என்று கூறி அவர்கள் தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்துள்ளனர்.

இந்நிலையில், தேவாலயத்திலிருந்து சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்றியது கிறிஸ்துவர்களை அவமதிக்கும் செயல் என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

“கிறிஸ்தவர்களின் புனித சின்னம் சிலுவை. அதை கட்டாயப்படுத்தி  அகற்ற வைப்பது, அவர்களை அவமதிக்கும் செயல்” என அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.