Home நாடு சிலுவை விவகாரம்: “அது தேச நிந்தனை குற்றம் அல்ல” – காலிட்

சிலுவை விவகாரம்: “அது தேச நிந்தனை குற்றம் அல்ல” – காலிட்

817
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 20 – தேவாலயத்தில் சிலுவையை அகற்றுவதற்காக செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

Crossremoved

“அந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த வகையான தேச நிந்தனையும் இல்லை. காரணம் அந்த ஆர்ப்பாட்டம் எந்த வகையிலும் மதத்தையோ அல்லது கிறிஸ்தவ நம்பிக்கைகளையோ இழிவு படுத்தவில்லை. அங்குள்ள குடியிருப்புவாசிகள் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த ஒரு வன்முறையும் இல்லை என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்ற வைத்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களில் தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பாக்காரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.