Home Featured தமிழ் நாடு முதல் பிரச்சாரத்திலேயே ஜெயலலிதா அதிரடி பதிலடி – பரப்புரையின் முக்கிய அம்சங்கள் என்ன?

முதல் பிரச்சாரத்திலேயே ஜெயலலிதா அதிரடி பதிலடி – பரப்புரையின் முக்கிய அம்சங்கள் என்ன?

696
0
SHARE
Ad

சென்னை – நேற்று அதிரடியாக தனது முதல் பிரச்சாரத்தை சென்னை தீவுத் திடலில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தோடு தொடக்கிய ஜெயலலிதா, பல குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்ததோடு, அடுத்து தான் அமைக்கப் போகும் ஆட்சியில் செயல்படுத்தப் போகும் திட்டங்கள் குறித்தும் அறிவித்துள்ளார்.

jayalalithaaஅவரது நேற்றைய தேர்தல் பரப்புரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

  • மதுபானக் கடைகளின் நேரம் குறைப்பு, கடைகள் எண்ணிக்கை குறைப்பு போன்ற திட்டங்களோடு, படிப்படியாக முழுமையான மதுவிலக்கு என்ற இலக்கு எட்டப்படும்.
  • மதுவை அறிமுகப்படுத்திய திமுக தலைவர் கருணாநிதி மதுவிலக்கைப் பற்றி பேசுவது விநோதமானது. மதுவிலக்கைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், கருணாநிதி பேசக் கூடாது.
  • 1948 ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த 1971 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மதுவிலக்கு நீக்கப்பட்டது. மதுவை அறிமுகப்படுத்திய திமுக தலைவர் கருணாநிதி மதுவிலக்கைப் பற்றி பேசுவது விநோதமானது.
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுவகைகள், சாராயம், கள் விற்பனைக்கான கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன. மதுவிலக்கை நீக்க முற்பட்ட போதே, அதைத் தடுக்கும் வகையில் கொட்டும் மழையில் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார் ராஜாஜி. ஆனால், அதை உதாசீனப்படுத்தினார் கருணாநிதி.
  • 1991ஆம் ஆண்டில் நான் ஆட்சியில் அமர்ந்தபோது கையெழுத்திட்ட முதல் கோப்பே மலிவு விலை மதுவை ஒழிப்பதுதான்.
  • எனது மனமார்ந்த குறிக்கோள் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான். மதுவிலக்கு பற்றி தீவிரமாக ஆராய்ந்துதான் முடிவெடுக்க முடியும் என்பதால் அதுபற்றி இதுவரையில் பேசாமல் இருந்தேன். அவ்வாறு நான் அறிவித்து விட்டால் அதனை எப்படியும் நிறைவேற்றுவேன் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் திமுக தலைவர் கருணாநிதி தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
  • மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும். ஒரே கையெழுத்தில் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது.
  • வெள்ளத்தைத் தொடர்ந்து எடுத்த தமிழக அரசின் செயல்பாடுகளை மத்திய அரசாங்கத்தின் அறிக்கையே பாராட்டுகின்றது எனக்குறிப்பிட்டவர், குறிப்பாக தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதில் அரசாங்கம் வெற்றி பெற்றது என்றார் ஜெயலலிதா.
  • 2011 அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த 54 திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • அதிமுக அரசின் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் ஜெயலலிதா பட்டியலிட்டார்.

சென்னை மற்றும் அதன் புறநகரைச் சேர்ந்த 21 அதிமுக வேட்பாளர்களையும் (தன்னையும் சேர்த்து) ஜெயலலிதா நேற்றைய கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.