Home Featured தமிழ் நாடு முதல்வர் நாற்காலியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் – இக்கட்டான நிலையில் சசிகலா!

முதல்வர் நாற்காலியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் – இக்கட்டான நிலையில் சசிகலா!

814
0
SHARE
Ad

sasikala-taking officeசென்னை – தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுவதற்குள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடுமாறு மன்னார் குடி ஜோசியர் கூறிவிட, உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சம்பிரதாயங்கள் அனைத்தும் சரியாக நிறைவு பெற்று முதல்வர் பதவியில் அமர நேரம் குறித்துக் கொண்டிருந்த நேரத்தில், டெல்லியில் இருந்து அதிர்ச்சித் தகவல் ஒன்று வந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சசிகலா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இதனால், மன்னார் குடி தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்க, சசிகலா கணவர் நடராஜனோ நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தீர்ப்பு சாதகமாக வந்துவிட்டால், பரவாயில்லை. பாதகமாக வந்துவிட்டால், நிச்சயமாக இந்த முறை ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்க முடியாது என்கிறது அதிமுக தரப்பு.

ops_modiகாரணம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, பன்னீர் செல்வம் எடுத்த சில முடிவுகளும், நடந்து கொண்ட விதமும் அவருக்கு எதிர்கட்சிகள் உட்பட பலரிடத்தில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

பாஜக முக்கியத் தலைவர்களே மோடியைச் சந்திக்க அனுமதி கிடைக்காமல் தயங்கி நின்று கொண்டிருந்த நேரத்தில், சட்டென டெல்லி கிளம்பி போய், மோடியைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து அவர் பேசிவிட்டு திரும்பியது சொந்தக் கட்சியிலேயே பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதோடு, பன்னீர் செல்வம் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி மக்களைச் சந்திக்கத் தொடங்கியது, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் நட்புறவாடுவது போன்ற செயல்பாடுகள், தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி பணிவு செல்வமாக இருந்த பன்னீர் செல்வத்தின் மீதான பார்வை மாற்றியுள்ளது.

எனவே, தீர்ப்பு பாதகமாகும் பட்சத்தில் மீண்டும் பன்னீர் செல்வத்தை முதல்வராகப் பதவி ஏற்க சசிகலா விடமாட்டார். ஒருவேளை பன்னீர் முதல்வராகும் பட்சத்தில் அடுத்து அவரை அசைக்கவே முடியாது என்பதை சசிகலா நன்கு உணர்ந்திருக்கிறார் என்கிறார் அதிமுகவிற்கு மிகவும் நெருக்கமான ஒருவர்.

தொகுப்பு: செல்லியல்