ஒரு மாதத்திற்கு முன்பு தாங்கள் கண்டெடுத்த விமானத்தின் பாகம் என நம்பப்படும் சிதைந்த பொருள் ஒன்றை, மாலத்தீவிலுள்ள கேளிக்கை விடுதி ஒன்றின் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது அந்தப் பாகம் குறித்து அந்நாட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் மாலத்தீவைச் சேர்ந்த ஹவீரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அது விமானத்தின் பாகங்கள் தானா? என்பது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட எம்எச்370 விமானம் நடுவானில் மாயமானது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அனைத்துலகத் தேடலில், மாலத்தீவைச் சேர்ந்த ஒருவர் தான் மிக அருகில் விமானம் ஒன்று பறந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்தார். அப்போது அதை மலேசியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மாஹ்லூபின் தனது டுவிட்டர் பக்கத்தில் விமானப் பாகம் கிடைத்தது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்: