இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவ் பால்மர் ஓய்வு பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அதனையடுத்து அப்பதவிக்கான நபரை தேர்வு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்துள்ளது.
இதன் 38 ஆண்டு கால வரலாற்றில் பால்மர் மற்றும் நிறுவனர் பில் கேட்ஸ் என இரண்டு சி.இ.ஓ-க்களை மட்டுமே அது சந்தித்து இருக்கிறது.
இப்பொழுது பால்மர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியலில் இரு இந்தியர்கள் உள்பட 9 பேர் இருக்கின்றனர். இதில் முதலாவது நபராக இந்தியர் சத்யா நாதெல்லா (படம்) என்பவர் வருகிறார்.
ஐதராபாத்தை சேர்ந்தவரான சத்யா, மைக்ரோசாப்டின் கிளவ்டு அண்ட் எண்டர்பிரைசசின் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் தனது இளங்கலை படிப்பான மின்னியல் தொழில்நுட்பத்தில் (எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்) மங்களூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
முதுகலைப் பட்டத்தை (மாஸ்டர் டிகிரியை) கணினி விஞ்ஞானத் துறையில் (கம்ப்யூட்டர் சையின்ஸ்) விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திலும், எம்.பி.ஏ. முதுகலை பட்டத்தை சிகாகோ பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.
இவரையடுத்து அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவோர் பட்டியலின் இரண்டாவது இடத்தில் மும்பை ஐ.ஐ.டி-யின் பழைய மாணவரான விக் குண்டோத்ரா இருக்கிறார். முன்னாள் மைக்ரோசாப்ட் நிர்வாகியான குண்டோத்ரா தி ஹை பிளையிங் கூகுள் இங்க் என்ஜினியராக இருந்து வருகிறார்.
இவர் இந்த தலைமை நிர்வாகப் பொறுப்பிற்கு திரும்பி வருவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.