Home நாடு செர்டாங் மருத்துவமனையின் ஒருபகுதி சரிந்தது! அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை!

செர்டாங் மருத்துவமனையின் ஒருபகுதி சரிந்தது! அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை!

796
0
SHARE
Ad

IMG_5807கோலாலம்பூர், செப் 30 – செர்டாங் மருத்துவனமனை பிரசவப் பிரிவின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்னாமா செய்தியறிக்கையின் படி, இன்று அதிகாலை 2.55 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நேற்று திரங்கானுவில் 6 மில்லியன் செலவில் கட்டப்பட்ட மசூதி ஒன்றின் மேல்கூரை இடிந்து விழுந்து அதன் பரபரப்பு அடங்குவதற்குள், இன்று செர்டாங் மருத்துவமனையின் பிரசவப் பிரிவு பகுதி இடிந்த சம்பவம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம், செர்டாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு இடிந்து விழுந்தது. இதில் மருத்துவர் ஒருவரும், 3 தாதிகளும் (Nurse) காயமடைந்தனர்.

அதற்கு முன்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவமனையின் ஒரு பகுதி தனியாகப் பிரிந்து வந்தது. அதன்பிறகு 800,000 ரிங்கிட் செலவில் விரிசல் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.