Home தொழில் நுட்பம் சீனாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் ஆப்பிள் மீது சந்தேகப் பார்வை!   

சீனாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் ஆப்பிள் மீது சந்தேகப் பார்வை!   

487
0
SHARE
Ad

Apple Store in Hamburgமாஸ்கோ, ஜூலை 31 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் பல கிளைகள் ரஷ்யாவில் இயங்கி வருகின்றன. அந்நிறுவனத்தின் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களுக்கான சந்தைகளும் ரஷ்யாவில் உள்ளன. இந்நிலையில் ரஷ்யா ஆப்பிளின் ‘மூல நிரல்கள்’ (Source Code) -ஐ தேசிய பாதுகாப்பு கருதி கேட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து 2013-ம் ஆண்டு வெளியேறிய, அமெரிக்க முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்நொடென், அந்நாட்டின் இராணுவ இரகசியங்கள் மற்றும் அமெரிக்க உளவு அமைப்பு பிற நாடுகளை உளவு பார்க்க பின்பற்றும் வழிபல இரகசியங்களை அம்பலப்படுத்தினார்.

ஸ்நொடென் கூற்றுப்படி, அமெரிக்க உளவு அமைப்பு அமெரிக்காவின் முக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் கருவிகளை தங்கள் உளவு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றது என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து பல முன்னணி நாடுகள் தங்கள் நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனகளின் தயாரிப்புகளை கவனமாக கண்காணித்து வருகின்றது.

உளவு நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தவும் ரஷ்ய அரசு தற்போது மிக முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளின் மூல நிரல்களை தங்களிடம் சமர்பிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

இதனை ஏற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தங்கள் தயாரிப்புகளான விண்டோஸ் இயங்குதளங்கள், மென்பொருட்கள் மற்றும் செயலிகளின் மூல நிரல்களை ரஷ்யாவிடம் சமர்பித்தது. அதனை ஏற்ற ரஷ்ய உளவுத் துறை ஆப்பிளின் ஐஒஎஸ் உட்பட அனைத்து தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான மூல நிரல்களை சமர்பிக்க, ஆப்பிளின் ரஷ்யாவிற்கான நிர்வாகியிடம் வலியுறுத்தி உள்ளது.

சமீபத்தில் சீனாவின் அரசு ஊடகங்கள், ஆப்பிள் தயாரிப்புகள் சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தன. அதனைத் தொடர்ந்தது ரஷ்யாவிலும் ஆப்பிள் மீதான கண்ணோட்டம் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.