Home வணிகம்/தொழில் நுட்பம் கோலாலம்பூர் பங்குச் சந்தை உயர்வு – 2.9 பில்லியன் ரிங்கிட் மதிப்பு பங்குகள் பரிமாற்றம்

கோலாலம்பூர் பங்குச் சந்தை உயர்வு – 2.9 பில்லியன் ரிங்கிட் மதிப்பு பங்குகள் பரிமாற்றம்

575
0
SHARE
Ad

KL Stock Exchange

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – கோலாலம்பூர் பங்குச் சந்தையில் நேற்று பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஆர்வம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்ததைத் தொடர்ந்து, பரபரப்பான முறையில் அதிக அளவிலான பங்குப் பரிமாற்றங்கள் நேற்று நடந்தேறின.

அண்மையக் காலத்தில் நேற்றுதான் கோலாலம்பூர் பங்கு சந்தை புதிய உச்சத்தைத் தொட்டது.

#TamilSchoolmychoice

2.9 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 5.1 பில்லியன் பங்குகள் நேற்று மட்டும் கைமாறின என புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரியில்தான் பங்குச் சந்தை பரிமாற்றங்களின் மதிப்பு 4 பில்லியன் ரிங்கிட்டைத் தொட்டது.

அமெரிக்க பங்கு சந்தையிலும் பங்குகள் விலை உயர்வு கண்டது கோலாலம்பூர் பங்கு சந்தையின் உயர்வுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது.

இருப்பினும், இந்த வட்டாரத்தின் பொருளாதார வளமை மேம்படும் என்ற உலக அளவிலான பொருளாதார நிபுணர்களின் ஆய்வறிக்கைகளும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வமும் இணைந்துதான் கோலாலம்பூர் பங்கு சந்தையின் அபரிதமான உயர்வுக்கு அடிப்படையாக அமைந்தன என வணிக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதற்கேற்ப கடந்த வெள்ளிக்கிழமை, மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகாரா வெளியிட்டிருந்த அறிக்கையில்,முதல் அரையாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.3 சதவீதம் விரிவடைந்தது என்ற புள்ளிவிவரமும் நாட்டின் பங்குச் சந்தை உயர்வுக்கு வழி வகுத்திருக்கின்றது.

நேற்று 10.4 புள்ளிகள் கூடுதலான உயர்வு கண்டு 1,872 புள்ளிகள் வரை கோலாலம்பூர் பங்குச் சந்தை உயர்வு கண்டுள்ளது.

நாட்டின் சிறப்பான பொருளாதார சூழ்நிலையினால் எதிர்காலத்தில் மேலும் அதிக அளவில் பங்கு விலைகள் உயரும் என்ற எதிர்பார்ப்பு வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே கூடியுள்ளதால், அவர்கள் இப்போதிருந்தே பங்குளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

இதுவும் கோலாலம்பூர் பங்குச் சந்தையின் அபரிதமான உயர்வுக்கான இன்னொரு காரணமாகும்.