Home கலை உலகம் இந்தி படங்களில் நடிக்கப் போவதில்லை – சூர்யா

இந்தி படங்களில் நடிக்கப் போவதில்லை – சூர்யா

475
0
SHARE
Ad

Surya (1)சென்னை, ஆகஸ்ட் 28 – மாஸ் மற்றும் அதிரடி என படத்திற்கு படம் வித்தியாசமாக நடிப்பவர் சூர்யா. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்தில் தயாரிப்பிலும் இருக்கிறார் சூர்யா. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் ‘ரத்த சரித்திரா’ படத்தில் நடித்த பிறகு இந்தியில் நடிக்காதது ஏன் என்கிறார்கள்.

தென்னிந்திய படங்களில் நடிப்பதில் எனக்கு போதுமான திருப்தி இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் ஆதரவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி இருக்கும்போது தமிழ் படங்களை விட்டுவிட்டு வேறு மொழி படங்களுக்கு நான் ஏன் போகணும். தமிழ் மக்களின் அன்பு மட்டும் எனக்கு போதும்’ என்று உருக்கமாக கூறியுள்ளார் சூர்யா.