Home உலகம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் மீண்டும் வடகொரியா – ஒபாமா கண்டனம்!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் மீண்டும் வடகொரியா – ஒபாமா கண்டனம்!

439
0
SHARE
Ad

north koriaவாஷிங்டன், டிசம்பர் 22 – வடகொரியா பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருவதால், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் அந்நாட்டை மீண்டும் இணைக்க அமெரிக்க நிர்வாகம் மறுபரிசீலனை செய்துவருவதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டன. இதன் பின்னணியில் வடகொரிய அரசு உள்ளது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

சோனி நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முக்கியக் காரணம், அந்நிறுவனம் தயாரித்துள்ள ‘தி இண்டர்வியுவ்’ (The Interview) திரைப்படமாகும்.

#TamilSchoolmychoice

வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் பற்றி நகைச்சுவையாக விமர்சிக்கும் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தை திரையிடாமல் தடுக்கவே வடகொரியா ஹேக்கர்களைக் கொண்டு இத்தகைய சைபர் தாக்குதலை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், “சோனி நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல், மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கிய இணைய வழி அடாவடித்தனம்”.

“பயங்கரவாத நாடுகள் பற்றிய மறுபரிசீலனை முடிந்தவுடன் உரிய பதில் நடவடிக்கையை அமெரிக்கா நடைமுறைப்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா வீண் பழி சுமத்துவதாக வடகொரியா அரசாங்கம் கூறுயுள்ளது. மேலும் இது தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் தங்கள் நாடு தயார் என்றும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருபது ஆண்டு காலம் இருந்து வந்த வடகொரியாவை 2008-ம் ஆண்டில் அப்போதைய புஷ் நிர்வாகம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.