Home உலகம் சார்லி ஹெப்டோவின் கேலிச்சித்திரங்களை வெளியீடு – ஜெர்மன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

சார்லி ஹெப்டோவின் கேலிச்சித்திரங்களை வெளியீடு – ஜெர்மன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

680
0
SHARE
Ad

German newspaper attackedஹம்பர்க், ஜனவரி 12 – பிரான்சின் சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரங்களை வெளியிட்ட ஜெர்மன் பத்திரிகை அலுவலகம் மீதும் மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஜெர்மனில் வெளியாகும் மார்கென் போஸ்ட் என்ற வட்டார நாளேட்டில், அண்மையில் சார்லி ஹெப்டோ பிரசுரித்த 3 கேலிச்சித்திரங்கள் அதன் முதல் பக்கத்தில் தற்போது வெளியிட்பட்டுள்ளன.

இதையடுத்து இந்தப் பத்திரிகை அலுவலகம் மீதும் தீவிரவாதிகள் எனக் கருதப்படும் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

German newspaper attacked
தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகை அலுவலகம்
#TamilSchoolmychoice

பிரான்ஸ் பத்திரிகை மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாகவே கேலிச்சித்திரங்களை வெளியிட்டதாக மார்கென் போஸ்ட் பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அப்பத்திரிகை அலுவலகத்தின் மீது கற்களும் தீப்பற்றும் பொருட்களும் வீசப்பட்டதாகவும், இதில் கீழ்தளத்தில் உள்ள இரண்டு அறைகள் சேதமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

hamburger-morgenpost-2
தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ள முக்கியக் கோப்புகள்

 

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்று ஜெர்மானிய காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது.

படங்கள்: EPA