Home உலகம் இத்தாலி கடல் பரப்பில் மீண்டும் படகு கவிழ்ந்தது – நூற்றுக்கணக்கானோர் பலியா?

இத்தாலி கடல் பரப்பில் மீண்டும் படகு கவிழ்ந்தது – நூற்றுக்கணக்கானோர் பலியா?

586
0
SHARE
Ad

libiyaரோம், ஏப்ரல் 19  – லிபியா அகதிகள் 700 பேர், மீன் பிடி படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி பயணிக்கையில் இத்தாலியின் மத்திய தரைக்கடல் பகுதியில் படகு மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதனால்,  நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

லிபியாவில் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாதம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்கள், பிழைப்பு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர். அவர்களின் இந்த ஆபத்தான கடல் பயணம், பெரும்பாலான சமயங்களில் பெரும் விபரீதத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மீன்பிடி படகு விபத்திற்குள்ளாகி இருப்பதை மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் உறுதி செய்துள்ள நிலையில், இத்தாலி கடற்படை வீரர்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையே விபத்திற்குள்ளான படகில் இருந்த 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த வாரமும் இதே போன்று,  படகு ஒன்று இத்தாலியின் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி விபத்திற்குள்ளானதில் 390 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.