பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தமுள்ள 650 தொகுதிகளில், கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 331 இடங்களையும், மிலிபாண்ட்டின் தொழிலாளர் கட்சி 232 இடங்களையும் இதர தொகுதிகளை நிகோலா ஸ்டர்ஜியன் தலைமையிலான ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் பீட்டர் ராபின்சன் தலைமையிலான டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சியும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
அதே போல் தோல்வியை ஒப்புக்கொண்ட எடி மிலிபாண்ட், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், வருத்தத்தை தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், தேர்தல் தோல்வி காரணமாக கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவார் என்றும் கூறப்படுகிறது.