Home கலை உலகம் ஹாலிவுட் நடிகர் டிராகுலா கிறிஸ்டோபர் லீ காலமானார்!

ஹாலிவுட் நடிகர் டிராகுலா கிறிஸ்டோபர் லீ காலமானார்!

476
0
SHARE
Ad

Sir_Christopher_Leeலண்டன், ஜூன் 12 – டிராகுலா, லார்ட் ஆப் த ரிங்ஸ் பாத்திரங்களின் மூலம் அழியாப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ, லண்டனில் 93-ஆவது வயதில் காலமானார்.

டிராகுலா எனும் பெயரைக் கேட்டால் இன்றைக்கும் நடுங்கும் அளவிற்கு ரத்தம் குடிக்கும் காட்டேரியாகத் திரையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கிறிஸ்டோபர் லீ. 1950-களின் பிற்பகுதியில் வெளியான படங்களில் டிராகுலாவாக ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் அமர வைத்தவர்.

ஜெம்ஸ் பாண்ட், லார்ட் ஆப் த ரிங்ஸ் படங்களில் வில்லனாகவும் கலக்கினார்.
கிறிஸ்டோபர் லீ என்றாலே கொடூரமான ஒரு வில்லன் எனும் எண்ணத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார்.

#TamilSchoolmychoice

உலகளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு வில்லனாக இருந்த அவர் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலமான போதும், 4 நாட்களுக்குப் பிறகே அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர்.