Home Featured உலகம் ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்ட காட்சி – காணொளியை வெளியிட்டது ஐஎஸ்ஐஎஸ்!

ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்ட காட்சி – காணொளியை வெளியிட்டது ஐஎஸ்ஐஎஸ்!

699
0
SHARE
Ad

russia123மாஸ்கோ – கடந்த சனிக்கிழமை எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற ரஷ்யன் ஏர்லைன்ஸ் விமானம் ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் 224 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த இயக்கத்தினர் மக்களை அச்சுறுத்துவதற்காக கட்டுக் கதைகளை வெளியிடுவதாக ரஷ்யா தெரிவித்தது.

இந்நிலையில் அந்த இயக்கத்தினர் தாங்கள் விமானத்தை வீழ்த்தியதற்கான காணொளியை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். அந்த காணொளியில் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போல் இருந்தாலும், அது ரஷ்ய விமானம் தானா? என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

அந்த காணொளியைக் கீழே காண்க:

#TamilSchoolmychoice