இறுதிபோட்டிக்கு பிலிப்பைன்ஸ், கொலம்பியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியின் முடிவில், பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்சோ வோட்ர்ஸ்பேக் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 2014-ம் ஆண்டின் உலக அழகி, பவுலினா வேகா கிரீடம் சூட்டினார்.
26 வயதான பியா, நடிகை, மாடல், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர்.
இரண்டாவது இடத்தை மிஸ் கொலம்பியா அரியட்னா கூடிரர்சும், 3-வது இடத்தை அமெரிக்க அழகி ஒலிவியா ஜோர்டனும் பெற்றனர்.
வெற்றியாளர் அறிவிப்பில் குளறுபடி
முன்னதாக போட்டி அறிவிப்பாளர் ஸ்டீவ் ஹார்வே, தவறுதலாக கொலம்பியா அழகி அரியட்னா கூடிரர்சை உலக அழகியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால், அரியட்னாவும் ஆச்சரியத்துடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். முன்னாள் உலக அழகி பவுலினா வேகா, அரியட்னாவிற்கு மகுடமும் சூட்டினார்.
அடுத்த சில நிமிடங்களில் தனது தவறை உணர்ந்த ஸ்டீவ் ஹார்வே, தான் தவறுதலாக அரியட்னாவின் பெயரை அறிவித்ததாகவும், பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்சோ வோட்ர்ஸ்பேக் தான், உலக அழகி என்று கூறவும், அரங்கத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தனது தவறுக்கு அறிவிப்பாளர், தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கூறினார்.