தான் உலக அழகியாகிவிட்டோம் என்ற உச்சக்கட்ட சந்தோஷத்தில் அரியட்னா மிதந்து கொண்டிருக்க, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென தான் தவறுதலாக ‘மிஸ் கொலம்பியா’ என்று அறிவித்துவிட்டதாக ஸ்டீவ் ஹார்வே மன்னிப்புக் கேட்டார்.
பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்சோ வோட்ர்ஸ்பேக் தான், உலக அழகி என்று கூறி அவர் தனது கையில் இருந்த அட்டையைக் காட்டியதும், அரங்கத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தனது தவறுக்கு அறிவிப்பாளர் தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கூறினார்.
இதனால் அங்கு சற்று நேரமும் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டது.