Home Featured நாடு ரபிசியை 3 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

ரபிசியை 3 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

749
0
SHARE
Ad

rafizi 3 bilionகோலாலம்பூர் – 1எம்டிபி மற்றும் எல்டிஏடி (Lembaga Tabung Angkatan Tentera) ஆகியவற்றில் தொடர்புடைய இரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை மூன்று நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று புத்ராஜெயா அமர்வு நீதிமன்றத்தில் இருந்து கைவிலங்கிட்டு அழைத்துவரப்பட்ட ரபிசி செய்தியாளர்களிடம், “மூன்று நாட்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அரசாங்க இரகசியங்கள் சட்டம், பிரிவு 8-ன் கீழ் ரபிசி விசாரணை செய்யப்படுவார் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இந்த மூன்று நாட்கள் தடுப்புக் காவல் விசாரணைக்காக ஜிங்ஜாங் காவல்நிலையத்தில் ரபிசி தடுத்து வைக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் ஆர்.சிவராசா தெரிவித்துள்ளார்.