Home Featured உலகம் துண்டுக் காகிதம் மூலம் சிங்கப்பூர் வங்கியில் 30,000 டாலர் கொள்ளை!

துண்டுக் காகிதம் மூலம் சிங்கப்பூர் வங்கியில் 30,000 டாலர் கொள்ளை!

744
0
SHARE
Ad

stanchart-robbery-dataசிங்கப்பூர் – சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்டு சார்டெர்ட் வங்கியின் கிளை ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் விநோதமான முறையில் 30,000 சிங்கப்பூர் டாலர் (90,000 மலேசிய ரிங்கிட்) கொள்ளையடித்துச் சென்றுள்ளது சிங்கப்பூர் காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை,ஹோலண்ட் வில்லேஜ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்டாண்டர்டு சார்டெர்ட் வங்கியின் கிளை ஒன்றில் நுழைந்த அந்நபர், அங்கிருந்த அதிகாரிகளிடம் துண்டு காகிதத்தில் எதையோ எழுதிக் கொடுத்து, சற்று நேரத்தில் அங்கிருந்து 30,000 டாலர் பணத்துடன் வெளியேறியிருக்கிறார்.

அவர் கையில் எந்த ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்று காவல்துறைத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

என்றாலும், அந்தக் காகிதத்தில் அவர் என்ன எழுதிக் கொடுத்தார் என்பதை காவல்துறை வெளியிடவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரை இது தொடர்பாக காவல்துறை தேடி வருகின்றது.