கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில், இண்டேரா மாஹ்கோத்தாவில், நடைபெற்ற கல்வி கண்டுபிடிப்புகளின் மோட்டார்விளையாட்டு மற்றும் தானியங்கி பந்தயம் ( EIMARace) 2016-ன் போது சிறிய இரக பந்தய கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த பார்வையாளர்களை நோக்கி வந்து விழுந்ததில், இஸ்வான் இசா (வயது 39), அவரது 5 வயது மகள் நூர் ஜுலைகா ஆகிய இருவரும் பலியாகினர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இஸ்வான் இசாவின் மனைவி சித்தி சுஹைசா செமானிடம் (வயது 38) காவல்துறை வாக்குமூலம் பெற முயற்சி செய்து வருவதாக குவாந்தான் காவல்துறைத் தலைவர் ஏசிபி அப்துல் அஜிஸ் சாலே தெரிவித்துள்ளார்.
சித்தி சுஹைசா தனது அதிர்ச்சியில் இருந்து வெளியே வரும் வரை அவருக்கு சிறிது கால அவகாசம் கொடுக்கும் என்றும் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.