Home Featured நாடு 200 ஆண்டு தமிழ்க் கல்வி – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016 தொடங்குகிறது!

200 ஆண்டு தமிழ்க் கல்வி – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016 தொடங்குகிறது!

1016
0
SHARE
Ad

200-yr-tamil-kalvi-teachers-conference

சுங்கைப்பட்டாணி – மலேசியாவில் தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பல்வேறு வகையிலான கொண்டாட்டங்கள் நாடெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று இரவு பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு சுங்கைப்பட்டாணியிலுள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழக மண்டபத்தில் தொடங்குகின்றது.

#TamilSchoolmychoice

“தமிழின் எழுச்சி தலைமுறை வளர்ச்சி” என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாநாடு மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன், நான்கு நாட்களுக்கு நடைபெறுகின்றது. “21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வி” என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

200-yr-tamil-kalvi-organising-committee

மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர்….

இன்று வியாழக்கிழமை பிற்பகல் தொடங்கி மாநாட்டுக்கு பங்கேற்பாளர்கள் வருகை தந்து பதிவு செய்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

துணைக் கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆலோசகராக இருந்து வழி நடத்தும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவராக வே.இளஞ்செழியன் செயல்படுகின்றார்.

ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது ஆலோசகராக, கணினி வல்லுநர் முத்து நெடுமாறன் இடம் பெற்றுள்ளார். இரண்டாவது ஆலோசகராக, முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி செயல்படுகின்றார்.

200-yr-tamil-kalvi-logo

ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராக இராமநாதன் நாகரத்தினமும் செயலாளராக சந்திரகலா ஐயப்பனும் செயல்படுகின்றனர். கல்வித் துறையைச் சேர்ந்தவர்களும், ஆசிரியர்கள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் என பலரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை இரவு தொடங்கும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில், முதல் அங்கமான, அறிமுக நிகழ்ச்சியில்  சு. பாஸ்கரன், சோ. சுப்ரமணி, முத்து நெடுமாறன் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.

மாநாட்டுக்கு கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தலைமை தாங்குகிறார். எதிர்வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறும் அதிகாரபூர்வ தொடக்க விழாவில் கல்வி அமைச்சர் டத்தோ மாட்சீர் காலிட் மற்றும் சுகாதார அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வித் துறையாளர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மலேசியாவில் தமிழ்க்கல்வியின் வரலாறு, கலைத்திட்டம், கற்றல் கற்பித்தல், மதிப்பீடு, 21ஆம் நூற்றாண்டுக் கல்வி முதலான கோணங்களில் மாநாட்டில் அமர்வுகள் நடைபெறவுள்ளன. மலேசியத் தமிழாசிரியர்கள் 24 பேர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் மாநாட்டில் படைக்கப்படவுள்ளன. மேலும் தமிழ்க்கல்வியின் மேம்பாட்டுக்கு உரிய வழிவகைகளை ஆராய்வதற்கு 2 பட்டறைகளும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.