சென்னை – அதிமுக பொதுச் செயலாளரிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து விட்டார் என்றும், அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார் என்றும் தமிழக ஊடகங்கள் அறிவித்தன.