Home Featured கலையுலகம் ஜெயலலிதா பிறந்தநாள்: அப்போலோ இரகசியத்தை வெளியிடுகிறாரா ஓபிஎஸ்?

ஜெயலலிதா பிறந்தநாள்: அப்போலோ இரகசியத்தை வெளியிடுகிறாரா ஓபிஎஸ்?

634
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவிற்கு இன்று பிப்ரவரி 24-ம் தேதி, 69-வது பிறந்தநாள்.

இதனையடுத்து, அவரது பிறந்தநாள் விழாவை இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும், ஓபிஎஸ் மற்றும் சிசிகலா அணியினர் போட்டி போட்டுக் கொண்டாடி வருகின்றனர்.

ஓ.பன்னீர் செல்வம், தீபா தரப்பினர், சென்னை தண்டையார் பேட்டை மணிக்கூட்டில் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருப்பதோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இன்னொரு அணியோ, தமிழ்நாடு அரசு சார்பில், ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக எடுத்து நடத்தி வருகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசினர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், நடப்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மரக்கன்றுகளை நட்டு புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கி வைத்தார்.

மேலும், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தனியார் மருத்துவமனைகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 690 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகள் என்ற போர்வையில் அரசே இதனை கோடிக் கணக்கில் செலவு செய்து நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே, ஜெயலலிதா பிறந்தநாளான இன்று ஓ.பன்னீர்செல்வம், அப்போலோவில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை வழங்கப்பட்டதில் உள்ள இரகசியத்தை வெளியிடப் போவதாக தமிழகத்தின் முக்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.