கோலாலம்பூரில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள்!

salman-khanகோலாலம்பூர் – அடுத்தமாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் “டா பாங் தி டூர் 2017 மலேசியா” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சல்மான் கான், பிரபு தேவா, பிபாஷா பாசு உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களோடு, கோலிவுட்டைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் மலேசியா வருகிறார்கள்.

வரும் ஏப்ரல் 14-ம் தேதி, மைன்ஸ் அனைத்துலகக் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் அந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பிறகு, அந்நட்சத்திரங்கள் ஹாங் காங், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களை (www.facebook.com/DabangtourKL) என்ற பேஸ்புக் பக்கம் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

 

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts