Home Featured வணிகம் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு!

பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு!

734
0
SHARE
Ad

petrol-pumpகோலாலம்பூர் – ரோன் 95 இரக எண்ணெய் 8 காசுகளும், ரோன் 97 இரக எண்ணெய் 9 காசுகளும், டீசல் விலை 8 காசுகளும் உயர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றது.

அதன் படி, ரோன் 95 எண்ணெயின் புதிய விலை லிட்டருக்கு 2.24 ரிங்கிட்டும் (முந்தைய விலை 2.16 ரிங்கிட்), ரோன் 97 எண்ணெய் லிட்டருக்கு 2.52 ரிங்கிட்டும் (முந்தைய விலை 2.43 ரிங்கிட்) டீசல் லிட்டருக்கு 2.16 ரிங்கிட்டும் (முந்தைய விலை 2.08 ரிங்கிட்), விற்கப்படவிருக்கிறது.

ஏப்ரல் தொடங்கி இனி வாரந்தோறும் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படும் என கடந்த மாதம் உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.