டிவி சேனல்களுக்கு இனி இலவச பாடல் கிடையாது – தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

vishal-imageசென்னை – புதிய படம் ஒன்று வெளியானவுடன் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் காட்சிகளும், முன்னோட்டக் காட்சிகளும் தொலைக்காட்சிகளுக்கு இதுநாள் வரை இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், விஷால் தலைமையிலான புதிய தயாரிப்பாளர் சங்கம், புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது.

அதன்படி, இனி தொலைக்காட்சி அலைவரிசைகள் காசு கொடுத்தால் மட்டுமே பாடல் காட்சிகள் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தற்போது 50-கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. அவை புதிய படத்தின் விமர்சனங்கள், தகவல்கள் ஆகியவற்றிற்கு தயாரிப்பாளர்கள் தரும் பாடல்கள் மற்றும் காட்சிகளைத் தான் பயன்படுத்தி வந்தன.

தற்போது தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கும் இந்தப் புதிய முடிவால், எத்தனை தொலைக்காட்சிகள் பாடல்களைக் காசு கொடுத்து வாங்கி ஒளிபரப்ப முன்வரும் என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது.

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts