பாகுபலி-2, இந்திப் படங்களிலேயே அதிக வசூலைப் பெற்று சாதனை!

bahubali2-poster-

புதுடில்லி – இந்தியத் திரைப்பட வரலாற்றில் இதுவரை யாரும் கனவிலும் எதிர்பார்க்காத சாதனையை பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை இரண்டே வாரங்களில் பெற்று விட்டது பாகுபலி-2.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இதுவரை வெளிவந்த இந்திப் படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படமாக சாதனை புரிந்த படம் அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படமாகும்.

ஆனால், பாகுபலி-2 படத்தின் இந்தி வடிவமும் வசூலில் மகத்தான சாதனை புரிந்து ‘டங்கல்’ இதுவரை பெற்ற மொத்த வசூலை விட அதிகமாக இரண்டே வாரங்களில் வசூலித்திருக்கின்றது.

எனவே தென்னிந்தியப் படம் ஒன்றின் இந்தி மொழி வடிவம் (டப்பிங்) இதுவரை வெளிவந்த அனைத்து அசல் இந்திப் படங்களை விட அதிகமாக வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.

படம் தொடர்ந்து இரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருவதாலும், இரண்டாம் மூன்றாம் முறை என பலர் சென்று பார்த்து வருவதாலும், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இனி பாகுபலி -2 படத்தின் சாதனையை இன்னொரு படம் முறியடிக்க முடியுமா என இந்தியத் திரைத் துறை வட்டாரங்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு பிரம்மாண்டமான சாதனைகளை பாகுபலி -2 நடத்திக் காட்டியிருக்கின்றது.

Comments

Recent Posts