Home உலகம் பொதுச் செயலர் தேர்வில் வெளிப்படைத் தன்மை தேவை – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்தல்!

பொதுச் செயலர் தேர்வில் வெளிப்படைத் தன்மை தேவை – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்தல்!

457
0
SHARE
Ad

indiaபுதுடெல்லி, நவம்பர் 20 – ஐ.நா.பொதுச் செயலாளரை  தேர்ந்தெடுக்கும் முறைகளில் வெளிப்படையான தன்மை தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐநாவில் இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி கூறியதாவது:- “ஐ.நா.சபையில் 193 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதனால் அவர்களின் குரல், ஒட்டுமொத்த அனைத்துலக சமுதாயத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. எனினும், ஐ.நா. பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் முறைகளில், பொதுச் சபையின் பங்களிப்பு இருப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.”

#TamilSchoolmychoice

“பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதில் அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படைத்தன்மை நிலைபெற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பான் கி-மூனின் பதவிக் காலம், அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. ஐ.நா. பொதுச் செயலர் தேர்வில், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இதன் காரணமாக பிற நாடுகளிடையே இந்த விவகாரத்தில் அதிருப்தி நிலவி வருகின்றது. இந்த சூழலில், இந்தியா தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.