Home நாடு விவேகானந்தர் ஆசிரமத்தை பாதுகாக்க வேண்டும் – தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்

விவேகானந்தர் ஆசிரமத்தை பாதுகாக்க வேண்டும் – தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்

754
0
SHARE
Ad

vivekananda-ashram-kl_400_300கோலாலம்பூர், அக்டோபர் 30 – தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஆசிரமத்தின் தளத்தில் முன்மொழியப்பட்டுள்ள மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்களை தடுத்து நிறுத்துமாறு தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

அது குறித்து ஹிண்ட்ராப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-

“நம் நாட்டின் ஒரு வரலாற்று பாரம்பரியத்தை இழந்துவிடாமால் இருக்க, பிரிக்பீல்ட்ஸ்,சுவாமி விவேகானந்தர் ஆசிரமத்தின் தளத்தில் முன்மொழியப்பட்ட மேம்பாட்டு வளர்ச்சி திட்டதை தலையிட்டு அதை தடுத்து நிறுத்துமாறு தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் தலைவர் திரு பொ.வேதமூர்த்தி வேண்டுக்கோள் விடுத்தார்.”

#TamilSchoolmychoice

“கோலாலம்பூர் நகராட்சி மன்றம், கடந்த 27.10.2014 ஆம் அன்று , சுவாமி விவேகானந்தரின் ஆசிரமத்தின் மீது பரிந்துரைக்கபட்ட மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தை விளம்பரபடுத்திய அறிக்கை ஹிண்ட்ராப் கவனத்திற்கு வந்தது. பொதுமக்களின் நலன் கருதி, ஒரு அரசு சாரா இயக்கம் என்ற முறையில் மலேசியா பாரம்பரியத்தை பாதுகாக்க ஹிண்ட்ராப் கடமைப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.”

“ஆசிரமத்தின் கட்டிடத்தை நாங்கள் ஒன்றும் செய்ய போவதில்லை . அதன் அருகாமையில்தான் இந்த வீடமைப்பு திட்டம் நடைபெறும் என அதன் அறங்காவலர் கூறும் வெற்று வாக்குறுதி நடை முறைக்கு சாத்தியபடாது. 100 பழைமை வாய்ந்த இந்த ஆசிரமத்தின் அருகாமையில் ஆடம்பர அடுக்கு மடி வீடும் கார் நிறுத்தும் இடமும் அமைக்கப்படுவது இந்த ஆசிரமதிற்கு பேராபத்தாகும் .இந்த வளர்ச்சி திட்டம் ஆசிரம கட்டிடத்தையே அலங்கோல படுத்திவிடும்.பராமரிப்பு கட்டிடங்களுக்கு அருகமையில் இருக்கும் சுற்று வட்டராத்தை “மேம்பாட்டு தடுப்பு இடங்களாக” யுனெஸ்கோ பிரகடனபடுத்தியுள்ளது. அவற்றுக்கான தெளிவான விதி முறையை யுனெஸ்கோ வரையறுத்தும் உள்ளது.”

“கடந்த 2004 ஆம் ஆண்டு, கோலாலம்பூர் மாநகர கெசட் செய்யபட்ட வரை பட அமைப்பின்படி, சுவாமி விவேகானந்தரின் ஆசிரமம் 2ஆம் வகை பாரம்பரிய கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2005 தேசிய பராமரிப்பு சட்டதின் கீழ் பாரம்பரிய பழமையான கட்டிடங்களை பாராமரிக்கவோ அல்லது அதனை புனரமைக்கவோ எல்லா உரிமையும் தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு மட்டுமே உண்டு. அப்படி இருக்கையில் தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு இந்த ஆசிரமத்தின் அறங்காவலரின் புதிய வீடமைப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த எல்லாம் வகையிலும் அதிகாரம் உள்ளது.அத்தோடு தேசிய பராமரிப்பு சட்டம் 25 பிரிவின் கீழ் தேசிய பாரம்பரிய இலாகா ஆணையாளருக்கும் இந்த புதிய வீடமைப்பு திட்டதை தடுத்து நிறுத்தும் எல்லா அதிகாரமும் உள்ளன என்று தெளிவுபடுத்தினர்.”

“ஒரு வரலாற்று பாரம்பரிய மிக்க கட்டிடதிற்கு உண்டான எல்லாம் தகுதியும் சுவாமி விவேகானந்தரின் ஆசிரமதிற்கு உள்ளது என்பதில் துளிகூட ஐயமில்லை. இது நமது கலாச்சார பொக்கிஷம்.பல்லினம் மக்கள் வாழும் நம் நாட்டின் ஒரு பிரதிபலிப்பு இது என்றுதான் கூற வேண்டும் என அவர் எடுத்துரைத்தார்.”

இவ்வாறு அந்த பத்திரிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.