தீபாவின் கணவரும் புதிய கட்சி தொடங்குகிறார்!

Deepaசென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்மையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார்.

அந்த சமயத்தில் தீபாவின் கணவர் மாதவன் அவருக்குப் பக்கபலமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று திடீரென ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து வணங்கிய மாதவன், தான் புதிய கட்சி தொடங்கவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதியக் கட்சித் தொடங்குவதற்கான காரணத்தைக் கேட்ட போது, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் சில தீய சக்திகள் புகுந்து தீபாவை செயல்படவிடாமல் தடுப்பதாகத் தெரிவித்தார்.

எனினும், அந்தத் தீயசக்திகளின் பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டார். இந்நிலையில், புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் மாதவன் கூறினார்.

Comments

Recent Posts